நாட்டின் அனைத்து விடயங்களும் அரச சேவையிலேயே தங்கியுள்ளது – ஜனாதிபதி

நாட்டின் அனைத்து விடயங்களும் அரச சேவையிலேயே தங்கியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

 அமைச்சக்களின் செயலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்

அதிகாரிகளை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பு.நாட்டின்  சகலவிடயமும்  அரச சேவையிலேயே  தங்கியுள்ளது.நான் இரண்டு விடயங்களில்  செயலாளராக பணியாற்றியுள்ளேன். செயலாளர்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்.  முன்வைக்கும்  வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்யக்கூடியவர்கள் செயலாளர்கள்.” எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் நாம் வெற்றிபெறுவதற்கு  அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.”

ஒரு அமைச்சகத்தில் எப்போதும் வேலை இருக்கின்றது குறிப்பாக, எமது  நாட்டில் அனைத்தும்  பொதுச் சேவையிலேயே  தங்கியுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதில்  திறமையாக செயற்படாவிட்டால்  , நாட்டின் முன்னேற்றம்  தடைபடும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!