மின்சக்தி அமைச்சருடன் டொலர் பிரச்சினை தான்!

தனக்கும் மின்சக்தி அமைச்சருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான உதய கம்மன்பில, தமக்கிடையில் பொதுவான டொலர் பிரச்சினையே ஏற்பட்டது எனவும், தெரிவித்தார்.
    
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுகளுக்கிடையிலான பிர்சினை துரதிஷ்டவசமாக பொது வெளிக்கு வந்துவிட்டது. அது பொது வெளிக்கு வராமல் இருந்திருக்க வேண்டும்.

எம்மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டதால் அதற்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த குற்றச்சாட்டை உள்ளக முறையில் தீர்க்கப்பட்டு தீர்வை மாத்திரம் மக்களிடத்தில் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.

இலங்கை மின்சார சபைக்கு போதியளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, தெரிவித்துள்ளார்.

அதிக எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னரும் மின்சார விநியோகத்தை நீடிக்க முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!