பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து

கொழும்பு பொரளை பகுதி குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பொரளை கித்துல்வத்த பகுதியில் இன்று அதிகாலை 5 வீடுகளில் இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபையின் 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் தீவிபத்து காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!