தவறு செய்ய துணை செய்தால் யூடியூப்பும் குற்றவாளி தான்!

ஒருவர் தவறு செய்ய துணை செய்தால் யூடியூப்பும் குற்றவாளி தான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    
யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வருவது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கூறியதாவது: யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கி செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான்.
யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற காணொலிகள் இடம்பெறும் நிலையில் இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன.

இதுபோன்ற பதிவுகளை தடை செய்யலாமே? வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகள் வந்தால் அதை தடை செய்யுங்கள். தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!