சாரம் தைத்துக் கொள்வதற்கு முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்ற காரியத்தை அரசாங்கம் செய்தது : டிலான் பெரேரா

சாரம் தைத்துக் கொள்வதற்கு முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்ற காரியத்தை அரசாங்கம் செய்து கொண்டது என ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dilan Perera) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிலே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் தொடர்பிலான சுயவிமர்சனம் செய்வதென்றால் நான் அரசாங்கத்தின் சார்பில் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்கின்றேன். எங்களுக்கு அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெற்ற ஓர் வழியாக தேயிலை உற்பத்தி காணப்பட்டது.

சேதன பசளை முறையை தேயிலை உற்பத்தியில் அமுல்படுத்தியதனால் தேயிலையினால் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி வருமானம் குறைந்துள்ளது.

சுய விமரிசன அடிப்படையில் இந்த விடயத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இது அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்த ஓர் விடயம் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது போனது என்பதனை ஒப்புக்கொள்கின்றேன்.

சாரத்தை தைத்துக்கொள்ள முன்னரே காற்சட்டையை கழற்றியது போன்றதொரு நிகழ்வாகவே இதனை கருத வேண்டுமென டிலான் பெரேரா இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!