சுற்றுலா பயணிகள் மூலம் 93 இலட்சத்துக்கு அதிகமான வருமானம்

கடந்த வார இறுதியில் பூங்காக்கள் ஊடாக  நாட்டுக்கு 93 இலட்சத்து 31 ஆயிரத்து 820 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் குறித்த வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையின் போது அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் பூங்காக்களை பார்வையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 16 ஆம் திகதி அதிகளவான சுற்றுலா பயணிகள் குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஆயிரத்து 342 உள்ளாட்டு  சுற்றுலா பயணிகள் மற்றும் 425 வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள்  பூங்காக்களை பார்வையிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த தினத்தில் மாத்திரம் 8 இலட்சத்து 59 ஆயிரத்து 840 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!