மின்விநியோகத் தடை குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு

நாட்டில் இன்று ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் Dhammika Wimalaratne தெரிவித்துள்ளார்.

அத்துடன், சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மாலை 5.30 முதல் 6.30 வரை A வலயத்திற்கும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரை B வலயத்திற்கும், இரவு 7.30 முதல் 8.30 வரை C வலயத்திற்கும், இரவு 8.30 முதல் 9.30 வரை D வலயத்திற்கும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மின்னுற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதற்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினாலேயே இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!