பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  
ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதற்கமைய சட்ட கட்டமைப்பொன்றை உருவாக்கி அதனூடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!