
நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும், மேலும் ,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!