மூளை பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க தவறிய கனேடிய பெற்றோருக்கு கிடைக்கவிருக்கும் தண்டனை!

கனடாவில் பிறப்பிலேயே மூளை பாதிக்கப்பட்டு நிரந்தர மருத்துவ உதவி தேவைப்படும் சொந்த மகனை கவனிக்கத் தவறிய குற்றத்திற்காக பெற்றோருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. கனடாவின் கல்கரியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெற்றோரால் பாதிக்கப்பட்ட அந்த மகன் தற்போது காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, உடல் நிலை தேறிவருவதாக தெரிய வந்துள்ளது.
    
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை கல்கரியின் குயின் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. Malinda Phillips மற்றும் Jonathon Grunewald தம்பதியின் 29 வயதான மகன் தொடர்பிலேயே தற்போது இவர்கள் நீதிமன்ற விசாரணை மற்றும் தண்டனையை எதிர்கொள்ள இருக்கின்றனர்.
பிறப்பிலேயே மூளை பாதிக்கப்பட்டு, வலிப்பு நோயுடன், படுத்த படுக்கையாக உள்ளார் குறித்த 29 வயது இளைஞர். 2020 அக்டோபர் மாதம் பேச்சு மூச்சின்றி காணப்பட்ட அந்த இளைஞரை மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

வெறும் 19.50 கிலோ மட்டுமே இருந்துள்ளது அவரது உடல் எடை. அந்த இளைஞரின் நிலை கண்டு, மருத்துவமனை நிர்வாகமே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தங்களது மகனை கவனிக்க தவறியதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளனர். அந்த தாயார் சொந்த மகனுக்கு வாரத்தில் ஒருவேளை மட்டுமே உணவளித்து வந்துள்ளார். போதிய மருத்துவ உதவிகளும் வழங்க மறுத்துள்ளார்.

ஆனால் கடந்த 2015 முதல் ஆல்பர்ட்டா நிர்வாகம் அளித்து வந்த 1,768 டொலர் ஊக்கத்தொகையை பெற்று வந்துள்ளனர். பகலில் வேலைக்கு செல்லும் தந்தை இரவு வீடு திரும்பியதன் பின்னரே, அந்த இளைஞருக்கு திரவ உணவு ஏதேனும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

பகல் முழுவதும் தாயாரின் பொறுப்பு என்பதால், அவர் தமது மகணை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்துள்ளார். வாரத்திற்கு 5 நாட்கள் மருத்துவ உதவி, மாதந்தோறும் நிதியுதவி என அனைத்தும் மாகாண நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்தும் அந்த தாயார் அனைத்தையும் தமது மகனுக்கு நிராகரித்து வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 8ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!