அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் வலட்!

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டதன் பின்னர், அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் வலட் (டிஜிட்டல் பை) அறிமுகப்படுத்தப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
    
கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் பரீட்சைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தங்கள் திறன்பேசியிலுள்ள டிஜிட்டல் வலட்டில் வைத்து எந்த நேரத்திலும் சமர்ப்பிக்க அனைத்து குடிமக்களுக்கும் அனுமதியளிக்கப்படும் என்று கூறினார்.

இத்திட்டம் 30 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திறன்பேசி மூலம் பணம் செலுத்துவதற்காக மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா கியூஆர் குறியீட்டை, அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தற்போது, லங்கா கியூஆர் குறியீடு செலுத்தும் திட்டம் நாட்டின் 13 முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலாத்துறைக்கும் லங்கா கியூஆர் குறியீட்டை அறிமுகப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நிகழ்வில் உரையாற்றிபோது தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!