மைத்திரி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவரே இதற்கான பதிலை வழங்கியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் ஆனால், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் முன்வைத்த கூற்றுக்கு முரணான ஒன்றை செய்யக் கூடியவர் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை எனக் கூறினாலும் ஜனாதிபதித் தேர்தலில் பலமான வேட்பாளராக போட்டியிட தேவையான பின்னணியை உருவாக்க அவர் நடவடிக்கை எடுப்பார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டே, அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் தலைமைத்துவத்தை இலக்கு வைத்தே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!