
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ எமது செய்திப் பிரிவுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பேணுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டாயம் அவதானிக்கப்படவுள்ளதோடு, கொரோனா தடுப்பூசி அட்டையினையும் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்வதற்கே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் வீதி அனுமதி பத்திரத்திரத்தினை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!