கெற்பேலியில் இராணுவம் துப்பாக்கிச் சூடு!

யாழ். கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் நேற்றுக் காலை மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
    
மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல் காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!