மது விருந்து விவகாரம்: பிரதமர் போரிஸ் மீது பொலிசார் விசாரணை முன்னெடுப்பு!

பிரித்தானிய பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் பொலிசார் விசாரணை முன்னெடுப்பார்கள் என்றே தெரிய வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பிரதமர் அலுவலக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும், விசாரணை முன்னெடுக்கப்படுவது முற்றிலும் சரியான முடிவு எனவும் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    
மேலும், பிரதமர் ஜோன்சன் சட்டத்தை மீறியதாக நம்பவில்லை என்று சொல்வது நியாயமானது என்று நான் நினைக்கிறேன் என்றார்.

2020 மே மாதம், பிரதமரின் அலுவலக இல்லத்தில் போரிஸ் ஜோன்சன் நடத்திய மது விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் அம்பலமானதை அடுத்து, தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

இருப்பினும் பொலிஸ் விசாரணை முன்னெடுப்பது இந்த விவகாரத்தில் தகுந்த முடிவாக இருக்கும் என கோரப்பட்டதை அடுத்து தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை விசாரணை என்பது பொதுமக்களுக்குத் தேவையான தெளிவை அளிக்க உதவும் என நம்புவதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!