சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று 24 மணிநேர பணி புறக்கணிப்பு

மேல் மாகாணத்தை  உள்ளடக்கிய வகையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார தொழிற்சங்கத்தினர் இன்று 24 மணிநேர அடையாள பணி பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.  

மேல் மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் இவ்வாறு அடையாள பணி பணிபுறக்கணிப்பில்  ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த  ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  முன்னதாக சுகாதார தொழிற்சங்கத்தினரால் பணிபுறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  

இந்த நிலையில், பதவி உயர்வு தொடர்பில் காணப்படும் முரண்பாடுகளை நீக்குவதற்கு சுகாதார அமைச்சர் அமைச்சரவையின் அனுமதியினை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இருப்பினும், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய 13 ஆயிரம் தாதியர்கள் தவறான அமைச்சரவை அனுமதி காரணமாக பதவி உயர்வை இழந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!