நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு

நாட்டில் வருடம்தோறும் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாதாந்தம் சுமார் 50 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த, பிளாஸ்டிக் கரண்டிகள்  சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுற்றாடல் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களும் இவ்வாறு சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு மாறாக மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்ற போதும், அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!