கொலை வழக்கில் சிக்கிய கனேடிய சிறுவன்: விசாரணையில் வெளிவந்த மற்றுமொரு திடுக்கிடும் தகவல்!

கனடாவில் கொலை வழக்கில் சிக்கிய 13 வயது சிறுவன், ஆயுதம் காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குறித்த சிறுவன் மீது தற்போது கொள்ளையில் ஈடுபட்டதற்கான வழக்கும் பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திங்களன்று தகவல் தெரிவித்த பொலிசார், குறித்த சிறுவன் சுமார் 5,000 டொலர் அளவுக்கு பொருட்களை கொள்ளையிட்டு தப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
    
ஜனவரி 18ம் திகதி, டேவ்ஸ் சாலை மற்றும் சாப்மேன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிலேயே குறித்த சிறுவன் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், போதை மருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றே பொலிசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளை சம்பவத்திற்கு பின்னர், ஜனவரி 19ம் திகதி பகல் சுமார் 11.30 மணியளவில் குடியிருப்பு ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் குறித்த சிறுவன் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜனவரி 20ம் திகதி குறித்த 13 வயது சிறுவன் மீது பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுவனை அடையாளம் கண்டுள்ள பொலிசார், சட்ட விதிகரின்படி கொலையாளியின் பெயரை வெளியிட மறுத்துள்ளனர்.

மேலும், குறித்த சிறுவனிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் தோட்டாக்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!