
விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கொள்கைகளிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் வர்த்தக ரீதியான விவசாயம் பாதிக்கப்பட்டால் உணவுப்பாதுகாப்பும் பாதிக்கப்படும். நாட்டின் விவசாயத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் உரப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடாது. தற்பொழுதாவது நாம் விட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் எதிர்ப்பினால் இந்திய பிரதமர் இரண்டு சட்டங்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அது அவருது நற்பெயருக்கு களங்கம் அல்ல. எனவே, இலங்கையிலும் வர்த்தக ரீதியான விவசாயத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் காரணிகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.
இழைக்கப்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள வெட்கப்படக்கூடாது. பிழையான விடயத்தை சரியானது என தொடர்ந்தும் விளையாடிக் கொண்டிருப்பதே வெட்கப்பட வேண்டியதாகும்.
உரக மானியத்திற்கு தேவையான தொகையை விடவும் கூடுதல் தொகை விவசாயிகளுக்கு நட்டஈடாக வழங்க நேரிட்டுள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!