அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கையர்: வெளிச்சத்துக்கு வந்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள்!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Huntingdaleல் வசித்து வந்த இலங்கையரான 40 வயது இந்திகா குணத்திலகாவுக்கு 6 வயதில் கோஹன் என்ற மகனும், 4 வயதில் லில்லி என்ற மகளும் இருந்தனர்.
    
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, குணத்திலகாவும் தற்கொலை செய்து கொண்டார். மிகுந்த மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இம்முடிவை அவர் எடுத்தார் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கான சரியான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குணத்திலகா குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பூக்கள் மற்றும் பொம்மைகளை அவர்களின் வீட்டருகே வைத்தார்கள்.

மேலும் அங்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி கொண்டனர்.இதனிடையில் குணத்திலகா திருமண வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி படிப்புக்காக அவுஸ்திரேலியா சென்ற குணத்திலகா Curtin பல்கலைக்கழகத்தில் படித்த போது உடன் படித்த அந்நாட்டு பெண்ணுடன் காதலில் விழுந்தார். பின்னர் கடந்த 2016ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

குணத்திலகாவின் மனைவி மற்றும் மாமியார் இருவருமே சட்ட துறை தொடர்பான பணியில் இருந்தனர். குணத்திலகாவை தனது மகள் திருமணம் செய்வதற்கு அவரின் தாயார் ஆரம்பம் முதலேயே தயக்கம் காட்டி வந்தார் என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

கடந்த 2020 – 2021 காலக்கட்டத்தில் குணத்திலகாவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியும், மாமியாரும் சட்ட துறையில் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ஜெயிப்பது என்பது குணத்திலகாவுக்கு கடினமாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அவர் தனது நண்பர்களிடமும் கூறியிருக்கிறார். இதையடுத்து குணத்திலகாவும் அவர் மனைவியும் பிரிவதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் ஒருபக்கம் நடந்துள்ளன.

மனரீதியான பிரச்சினை கொண்ட குணத்திலகாவுடன் வாழ முடியாது என்ற காரணத்தையும் அவர் மனைவி கூறியதாக தெரிகிறது. இதற்கு அவரின் தாயாரும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்தே தனது பிள்ளைகளுடன் தனியாக வசிக்க தொடங்கியிருக்கிறார் குணத்திலகா. இது குறித்து குணத்திலகா நண்பர்கள் கூறுகையில், குணத்திலகா தனது மனைவியையும், பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடைய மனைவி தனது குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை. மாமியாரும் இதை தான் செய்தார்.

இந்த பிரச்சனைக்கு மத்தியில் இந்திகா குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவரது மனச்சோர்வு அதிகமாகிக்கொண்டே இருந்த சூழலில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட இரண்டு அழகான குழந்தைகளின் வாழ்க்கை இந்தப் பிரச்சனைக்கு மத்தியில் அழிந்துவிட்டது என வேதனை தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!