அனுரகுமார மீதான தாக்குதல் – உட்கட்சி மோதலாகவும் இருக்கலாம்!

மக்கள் விடுதலை முன்னணி, வீடுகளையும் மக்களையும் எரித்த வரலாற்றைக் கொண்ட கட்சி என்றும், அனுரகுமார மீதான முட்டை வீச்சு, ஜே.வி.பி உறுப்பினரின் தனிப்பட்ட சண்டையாக அல்லது அவர்களுக்கு இடையேயான சண்டையாகக் கூட இருக்கலாம் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்தார்.
    
அண்மைய சேறு பூசும் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக ஜே.வி.பி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

சேறு பூசும் தாக்குதலின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கமானது, ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாகவும் நாட்டில் அரசியல் சக்திகள் இணைந்து வாழ வேண்டும் என்று நம்பும் அரசாங்கமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அமைச்சர், எனவே இதை யார் செய்தார்கள் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!