சீன ராணுவத்தினரால் கடும் சித்திரவதைக்குள்ளான இந்திய சிறுவன்!

அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றனர்.

சீன எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வைத்து இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்தது. ஆனால் வாலிபர் ஜாணி யாயிங் அங்கிருந்து தப்பி வந்தார். ஆனால் சிறுவன் மிரம் தரோன் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.
    
இந்த நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை 9 நாட்களுக்கு பிறகு ஜனவரி 27 ந் தேதி இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது.
சிறுவன் ஸ்ரீ மிரம் தரோம் , இந்தியா டுடேக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தன்னை கட்டி வைத்து மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்ததாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

“அவர்கள் என் கைகளைக் கட்டி, என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றனர். முதல் நாள், அவர்கள் என்னை சித்திரவதை செய்தார்கள்; என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொடுமை செய்தனர். ஆனால் இரண்டாவது நாளிலிருந்து அவர்கள் என்னை சித்ரவதை செய்யவில்லை.

கைவிலங்கிடப்பட்டு, என் தலையை துணியால் மூடினர். பின்னர் நான் சீன ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், என்னை அடித்தார்கள், ஆனால் உணவும் தண்ணீரும் கொடுத்தனர் என கூறி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!