நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளி உலகிற்கு வந்த கிம் ஜாங் உன் மனைவி!

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி 5 மாதங்களில் முதல்முறையாக வெளி உலகிற்கு தோற்றமளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது சமீபகாலமாக வெளி உலகிற்கே வராமல் இருந்த, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவி ரி சோல் ஜு (Ri Sol Ju), கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து முதல் முறையாக புதன்கிழமையன்று அரசு ஊடகங்களில் தோன்றினார்.
    
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது மனைவி ரி சோல் ஜு ஆகியோர் சந்திர புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் வகையில் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மன்சுடே கலை அரங்கில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரி சோல் ஜு கடைசியாக செப்டம்பர் 9 அன்று, நாடு நிறுவப்பட்ட ஆண்டு விழாவில், கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சூரியனின் கும்சுசன் அரண்மனைக்கு தனது கணவருடன் சென்றபோது பொதுவில் காணப்பட்டார்.

கிம் தனது மனைவி ரி சோல் ஜூவுடன் அரங்கத்தில் வரவேற்பு இசையின் மத்தியில் தோன்றியபோது, ​​பார்வையாளர்கள் ‘ஹுர்ரா!’ என்ற ஆரவாரபடுத்தி வரவேற்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு கச்சேரியில் கலந்து கொள்வதற்கு முன்பு அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பொது வெளிக்கு வரவே இல்லை.

அதனால், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் கர்ப்பமாக இருக்கலாம் என ஊகங்கள் நிலவியது.

அந்த ஊகங்களை உடைக்கும் விதமாக, தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை சட்டமியற்றுபவர்களிடம், COVID-19 நோய்த்தொற்றுகளைத் தடுக்க வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்ததாகவும், ஆனால் “தங்கள் குழந்தைகளுடன் நன்றாக விளையாடுவதாகவும்” கூறினார்.

கிம் மற்றும் ரிக்கு 3 குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

அதேபோல், வட கொரியா எந்த COVID-19 பாதிப்புகளையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அதன் எல்லைகளை மூடப்பட்டுள்ளன மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!