மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு பொலிஸாரின் சன்மானம்

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் திணைக்களம் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் சாலை வலையமைப்பை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான நடைபாதைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அதிகளவில் பணத்தை செலவிட்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தும்,மேலும் அதனுடாக பயணிக்கும் அனைவருக்கும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எச்சரிக்கை விடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை,  மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை அடையாளம் காண பொலிஸார் இன்று முதல் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக கண்டறியப்பட்டால், சாரதி அனுமதி உரிமம் இரத்து செய்யப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 25 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!