நடந்தது உண்மை தான்… ஆனால்… அடுத்த இலக்கை அறிவித்தார் மைத்திரி

ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டத்துடன் ஜனநாயகம் தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சி 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தது உண்மை என்ற போதிலும் அவை தற்பொழுது பழைய கதைகளாகும் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து சுதந்திரக் கட்சி முழு அளவில் ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினாலும் தனித்து தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனவும், கூட்டணியாகவே தேர்தலில் களமிறங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!