தமிழக அரசை கலைக்காதது ஏன்?

ஊழல் அதிகமாக இருக்கும் தமிழக அரசை கலைக்காதது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ஜெயலலிதா இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டம் போல் பேசி வருகிறார். தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும்போது விரைவில் இவர்கள் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை காட்டுகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாக கூறி இருக்கிறார். அப்படியானால் மத்திய அரசு உடனடியாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை.

ஊழல் பற்றி பேசும் அமித்ஷா கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் அவரது மகன் எப்படி ஆயிரம் கோடி சம்பாதித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும்.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!