மின்சாரத்தை துண்டித்தால் சட்ட நடவடிக்கை! – மின்சார சபைக்கு எச்சரிக்கை.

மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியில்லாமல் மின்விநியோகத்தை துண்டித்தால் இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
    
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை மின்சார சபையின் மின்நிலையங்களின் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து திட்டமிட்ட மின்விநியோகம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கையை இரண்டு முறை பரிசீலனை செய்தோம்.

மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை இல்லாத காரணத்தினால் திட்டமிட்ட மின்விநியோக தடை யோசனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இருப்பினும் நேற்று முன்தினம் இரவு ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியில்லாமல் மின்விநியோகத்தை துண்டித்தால் சபைக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!