நாட்டில் மீண்டும் பயணக் கட்டுபாடு விதிக்கப்படுமா?

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம்  எதுவும் மேற்கொள்ளவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில்  அனைத்து  பிரஜைகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன் சுகாதாரமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதும் மிகவும் அவசியமானது எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை நாட்டில் அண்மைய  சில  நாட்களாக  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்ற நிலையில் அனைவரும்  விரைவாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார தரப்பு  பொதுமக்களை அறிவிறுத்தியுள்ளது. 

அத்துடன் சமூகத்தில்  கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்படும் பெரும்பாலானவர்கள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர்  ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!