கோதுமை நிவாரணம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை

கோதுமை நிவாரணம்  தொடர்பில்  விரைவில்  அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு  பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் நிவாரண அடிப்படையில்     ஒரு கிலோகிராம்  கோதுமை மா 80 ரூபாவுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

 எனினும்  இதுவரை குறித்த  மானிய  விலையில்  தமக்கு  கோதுமை மா கிடைக்கப் பெறவில்லை என மக்கள்  தெரிவித்திருந்தனர்

இதேவேளை  பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண அடிப்படையில்     ஒரு கிலோகிராம்  கோதுமை மாவினை  80 ரூபாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையாத காரணத்தினால் அதனை வழங்கமுடியாதுள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான அமைச்சரவை   பத்திரம் எதிர்வரும் வாரம்   தாக்கல் செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!