நெருக்கடிகளுக்கு தீர்வினை முன்வைக்க தயார்! மைத்திரி அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வொன்றை தீர்மானித்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,


குறித்த தீர்வு தொடர்பில் அகில இலங்கை குழுவின் அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மின்சாரம், எரிவாயு மற்றும் விவசாய நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டுமெனவும், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!