அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் வாத பிரதிவாதங்கள்

பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா மாத்திரம் காரணமல்ல என அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த கருத்து தொடர்பில் அமைச்சருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவிற்கும் இடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்களுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. 

அமைச்சர் உதய கம்மன் பிலவின் கருத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதை தொடர்ந்தே இவ்வாறு வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர் உதய கம்மன் பிலவின் குறித்த கருத்திற்கு ரோஹித்த அபேகுணவர்தன, எஸ் ஏ டி ஜகத்குமார, திஸ்ஸ குட்டியாராச்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பனை வெளிப்படுத்தியமையை தொடர்ந்து கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா மாத்திரம் காரணமல்ல தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடனும் இதற்கு காரணம் என தாம் தெரிவித்ததாக அமைச்சர் உதய கம்மன்பில இதன்போது விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!