தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்ட விதம்! ஜனாதிபதி கோட்டாபய எடுத்துள்ள நடவடிக்கை

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடாத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்படும் போது முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், பக்கச்சார்பான முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடாத்தும் குழு அல்லது பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்விக்குழு என்பன மீது தேவையற்ற வகையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றனவா என்பது குறித்து விசாரணை நடாத்தப்பட உள்ளது.

இவ்வாறான முறைகேடுகள் குறித்து விசாரணை நடாத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!