சீனாவில் தண்டவாளத்தின் இடையே சிக்கியவரை காப்பாற்ற ரெயிலை தூக்கிய மக்கள்!

FILE – In this Feb. 26, 2015 file photo, commuters wait to catch a train at a railway station in Mumbai, India. Prime Minister Narendra Modi hopes the visit this weekend, starting Friday, Dec. 11, 2015, by Shinzo Abe will be a major step in transforming India into an economic powerhouse with Japan’s help in building bullet trains, “smart cities” and accessing nuclear technology. India and Japan are set to sign a $15 billion agreement for a high-speed train linking the Indian financial hub of Mumbai with Ahmadabad, the commercial capital of Modi’s home state, Gujarat. The train would cut travel time on the 505 kilometer (315 mile) route from eight hours to two. (AP Photo/Rafiq Maqbool, File)

சீனாவின் தலைநகரான பீஜிங்கின் டோங்சிமென் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அவர் செல்வதை கண்ட ரெயில் ஓட்டுநர் உடனே ரெயிலை பிரேக் பிடித்து உடனே நிறுத்தியுள்ளார்.

ஆனால், ரெயில் மிக அருகில் வந்த பின்னரே நிறுத்தபட்டதால் அந்த நபரின் கால் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. காலை எடுக்க அவர் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களால் பயணியை மீட்க முடியவில்லை. ரெயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கியிருந்த பயணியின் நிலையை கண்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முடிவு செய்தனர். ஊர் கூடி தேர் இழுத்தது போல அங்கிருந்த அனைவரும் இணைந்து ரெயிலை சிறிது தூரத்திற்கு ஒரு பக்கமாக தூக்கி தண்டவாளத்தில் சிக்கியிருந்த நபரை காயங்களின்றி உயிரோடு மீட்டனர்.ரெயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியிருந்த நபரை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மீட்ட வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதுவரை 11 மில்லியன் பேர் இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் பார்த்துள்ளனர்.

Tags: