நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் திடீரென நிரம்பி வழியும் கோவிட் நோயாளிகள்!

இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டு வாரங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஏனைய நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்காக, 14,000 படுக்கைகள் தயார் நிலையிலும் 6,000 படுக்கைகள் பயன்பாட்டிலும் உள்ள நிலையில்,கோவிட் நோயாளிகளுக்கான ஏற்பாடுகளை வைத்தியசாலைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

கோவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகளில், 59 படுக்கைகள் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.

இதன் காரணமாக வைத்தியசாலைகளில் இடவசதி மற்றும் படுக்கைகள் இல்லாமல் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

எனவே தொற்று பரவுவதைத் தடுக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!