காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் அன்னா ஹசாரே: ஏதற்காக?

2022 பிப்ரவரி 14ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசு பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் ஒயின் விற்கும் முடிவை எதிர்த்து பிப்ரவரி 14 ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
    
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் ஒயின் விற்பனையை அனுமதிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சனிக்கிழமை ‘நினைவூட்டல்’ கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்திற்கு முதல்வரிடமிருந்த எந்தவித பதிலும் வராததால், பிப்ரவரி 14ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தியவர் அன்னா ஹசாரே.
இவர் கடந்த 2011 ஆண்டு ஊழலற்ற இந்தியா அமையவேண்டும் என்று கோரி டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு லோக்பால் அமைப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
      


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!