தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட தந்தை!

தண்ணீரில் மூழ்கிய தனது மகளை காப்பாற்றும் முயற்சியில் தந்தை உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரபல தொழிலதிபராக இருப்பவர் Simon Pearson (47), இவர் மனைவி Emma (43). இவர்களுக்கு Lily (10) என்ற மகளும் Monty (6) என்ற மகனும் உள்ளனர்.விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் Simon தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு தெற்கு இத்தாலிக்கு சென்றுள்ளனர்.

இவர்களுடன் Simon-ன் மாமனார் Anthony McGregor-ம் உடன் சென்றுள்ளார்.அங்குள்ள கடலில் Simon, Lily, Anthony ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குளித்துள்ளனர்.அப்போது திடீரென மூவரும் கடலில் மூழ்க தொடங்கினார்கள். Anthony சாமர்த்தியமாக தண்ணீரில் நீந்தி வெளியேறினார்.Simon-க்கு நீச்சல் தெரிந்திருந்த நிலையில் தனது மகள் Lily-ஐ காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.தண்ணீரில் தத்தளித்த நிலையில் தனது கையை கெட்டியாக பிடித்து கொள் என மகளிடம் Simon கூறியுள்ளார்.அந்த சமயத்தில் அங்கிருந்த ஒருவர் Simon மற்றும் Lily-ஐ காப்பாற்ற நீரில் குதித்துள்ளார்.

ஆனால் அவரால் Lily-ஐ மட்டுமே காப்பாற்ற முடிந்தது. தண்ணீரின் வேகத்தை ஈடு கொடுக்க முடியாமல் Simon நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து Simon மனைவி Emma கூறுகையில், தனது உயிரை காட்டிலும் தனது மகளின் உயிரை காப்பாற்றவே இறுதி வரை Simon போராடியதாகவும், அன்பான கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.Simon-ன் பிரேத பரிசோதனை முடிவில் அவர் நுரையீரலில் அதிகளவு தண்ணீர் போயுள்ளது தெரியவந்துள்ளது.

Tags: