இலங்கையில் தீவிரமடைந்துள்ள கோவிட் தொற்று – 3 நாட்களில்102 பேர் மரணம்

பதுளை பொது வைத்தியசாலையில் 20 வைத்தியர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் பயணியாற்றும் ஒன்பது வைத்தியர்களில் ஆறு பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்..

பரிசோதனைகளின் மூலம் பதிவாகும் நோயாளர்களை விட சமூகத்தில் அதிகமான நோயாளிகள் இருக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாட்டில் 102 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்த மூன்று நாட்களில் தினசரி 30க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 7ம் திகதி 35 கோவிட் மரணங்களும், 8ம் திகதி 36 மரணங்களும், நேற்று 31 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!