மஹிந்த தேர்தலுக்கு அஞ்சும் தலைவர் அல்ல! – நாமல் தெரிவிப்பு

தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் தேர்தல் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்” என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

குருநாகலில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

“மஹிந்த ராஜபக்ச என்பவர் தேர்தலுக்கு அஞ்சும் தலைவர் கிடையாது. முன்கூட்டியே தேர்தலை நடத்தித்தான் பழக்கம். எனவே, தேர்தலைப் பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும். அது எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக உரிமை. அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!