தனுஷ்கோடி அருகே, பாதுகாப்பு தகவல் தொடர்பு சிக்னல் குறித்து ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே, அரிச்சல்முனையில், பாதுகாப்பு தகவல் தொடர்பு சிக்னல் குறித்து, ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தனுஷ்கோடியில் இருந்து, 25 கி.மீ., முதல் 45 கி.மீ., துாரத்தில், இலங்கையின் கச்சதீவு, நெடுந்தீவு, தலைமன்னார் பகுதிகள் உள்ளன. எல்லைப்பகுதியில் அச்சுறுத்தல் இருக்கும் போது, பாதுகாப்பு படையினருக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

கடற்படை, விமானப் படைக்கு, தகவல் தொடர்பு சிக்னல்கள் குறித்து, அரிச்சல்முனையில் ராணுவத்தின், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஆய்வு செய்தனர். ‘ஆய்வு ஓரிரு நாட்கள் நீடிக்கும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: ,