மங்கள சமரவீர மரணிக்கவில்லை! மனோ கணேசன்

தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படும் போது அதற்கு எதிராக மேற்கொண்ட போராட்டங்களில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தங்களுடன் இருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதேபோன்று பிற்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரச்சினைகள் வந்த போது முஸ்லிம் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்தார்.

அவ்வாறான தலைவர் இன்று யார் இருக்கின்றார் என கேட்கிறேன். அதனால் தமிழ் மக்கள் அவரை நன்றியுடன் நினைவுகூருகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மங்கள சமரவீர மரணிக்கவில்லை.

அவர் எங்களுடன் வாழ்ந்து வருகின்றார். அவரின் கொள்கையான இந்த நாடு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் நாடு என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வோம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!