பட தயாரிப்பாளராக மாறும் நடிகை சமந்தா!

நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா வரும் செப்டம்பர் மாதம் நாக சைதன்யாவை மணந்து இல்லறத்தில் நுழைகிறார். அதேசமயம் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். சிறுவயதில் தொழில் அதிபர் ஆகவேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர் சமந்தா.

சமீபத்தில் அதற்கான ஏற்பாடுகளுடன் களம் இறங்கியவர் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக நிறுவனம் தொடங்கினார். அதன் மூலம் கைத்தறி ஆடைகள் மற்றும் மூலப் பொருட்கள் மற்றும் உடை வடிவமைப்பு போன்ற பிஸ்னஸ் செய்து வருகிறார். தற்போது தனது பிஸ்னஸை திரைத்துறையிலும் விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார். விரைவில் தமிழ், தெலுங்கில் கருத்தாழமிக்க படங்களை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த தகவலை சமந்தா உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் விஜய்யுடன் ‘மெர்சல்’ உள்பட தமிழ், தெலுங்கில் 7 படங்களில் நடித்து வருகிறார்

Tags: