இழந்த பார்வையை மீட்டுத்தரும் இலத்திரனியல் நுணுக்குக்காட்டி

அமெரிக்காவில் உள்ள Rice பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் பொறியியலாளர்களும் இணைந்து நுணுக்குக்காட்டி ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இலத்திரனியல் நுணுக்குக்காட்டி வகையை சேர்ந்ததாகவும், தட்டையாகவும் இருக்கும் இச் சாதனத்தினால் இழந்த பார்வையை மீட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த நுணுக்குக்காட்டி மூளையின் மேற்பரப்பில் உள்ள நியூரோன்களை தூண்டுவதுடன், சமிக்ஞை குறிமாற்றம் (Decoding) செய்கின்றது.

இதன் காரணமாக பார்வை மற்றும் ஒலி தொடர்பான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்ப மாற்று வழி ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்திற்காக 65 மில்லியன் டொலர்கள் Defense Advanced Research Projects Agency (DARPA) அமைப்பினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags: