தமிழக விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர்

டெல்லியில் கடந்த 25 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை 16ம் திகதி முதல் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இவர்கள் வலியுறுத்தி நூதனமான முறையில் போராடி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக விவசாயிகள் 6 பேர் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த மார்ச், ஏப்ரலில் 41 நாட்கள் நடத்திய போராட்டத்தில் 6 மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை. எனவே தங்கள் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால் சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: