அமெரிக்காவில் சாதனை படைத்த விக்ரம் வேதா!

மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் வசூல் அமெரிக்காவில் 6 லட்சம் டாலர்களை கடந்துள்ளது. புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதவன், விஜய் சேதுபதி, கதிர், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சஷிகாந்த் தயாரித்திருக்கிறார்.

தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் இப்படம் வசூல் சாதனை செய்துள்ளது. 6 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் பெரிய நாயகர்களின் தமிழ் படங்களுக்கு இணையாக மாதவன், விஜய் சேதுபதி படம் வசூலித்துள்ளது. இதற்கு முன், ரஜினி, கமல், விஜய், மணிரத்னம், ஷங்கர் ஆகியோரது படங்கள் தான் 600000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

Tags: