ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிகள்!

ஐஸ்க்ரீம் இந்தப் பெயரை கேட்டாலே பலர் சிலாகிப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் அதற்கு அடிமையே. வெயிலில் மட்டுமல்ல, மழை பெய்யும்போதும் ஐஸ்க்ரீம் சாப்பிட ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால், எந்த ஐஸ்க்ரீமாக இருந்தாலும் நம் கைக்கு வந்த சில நிமிடங்களில் அது உருகிவிடும்.

இந்நிலையில், ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் ஒரு புதுவித தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். கனசவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஐஸ்க்ரீமை அதன் வடிவம் மாறாமல் இருக்கும் ஆய்வில் இறங்கினார்கள். இதையடுத்து, மூன்று மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல், அதே வடிவத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். அதன்படி, ஸ்ட்ராபெரி பழத்தில் இருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் ( polyphenol ) என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தினர். இந்த முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஹேர் ட்ரையர், சூடான காற்று ஆகியவற்றில் சுமார் 5 நிமிடம் வைத்தும் ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லையாம். வெண்ணிலா, சாக்லெட், ஸ்ட்ராபெரி என்று மூன்று சுவைகளில் இந்த உருகாத ஐஸ்க்ரீம்களை கண்டுபிடித்துள்ளனர்.

Tags: ,