அமைச்சர் பசில் கையாளும் ஆங்கிலமே இலங்கைக்கு பொருத்தமானது

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்தும் ஆங்கில முறையே இலங்கைக்கு பொருத்தமான இரண்டாவது மொழி வழிமுறை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பசில் ராஜபக்ச ஆங்கில பத்திரிகை ஒன்றின் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் சம்பந்தமான காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக மகிந்த பத்திரன தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச அந்த காணொளியில் crows என ஆரம்பத்தில் கூறிய பின்னர், கப்புட்டாஸ் (காகங்கள்) என சுமார் 3 நொடிகளுக்கு பின்னர் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் பேசும் பலர் அதில் சிங்களத்தையும் கலந்து பேசுவது வழக்கம். இதனை vernacular என்பார்கள். பசில் ராஜபக்ச இந்த ஆங்கில முறையையே பயன்படுத்தியுள்ளார். இதுதான் இலங்கைக்கு பொருத்தமான இரண்டாது மொழி உத்தியாகும்.

இதனை பயன்படுத்தும் இரண்டு பேரை நான் பார்த்துள்ளேன். ஒரு தற்போது பல்கலைக்கழகம் ஒன்றின் உப வேந்தர். அவரது கற்ற துறை விவசாய விஞ்ஞானம். அவரும் vernacular முறை அதாவது சிங்களம் கலந்த ஆங்கிலத்தையே பயன்படுத்துவார்.

மற்றைய நபர் தான் அமைச்சர் பசில். இவர்கள் மொழியை பயன்படுத்துவது தமது புலமையை காண்பிப்பதற்கு அல்ல. தொடர்பாடல்களுக்கு அவர்கள் அதனை பயன்படுத்துகின்றனர்.

மொழி என்பது ஒரு கருவி மாத்திரமே. மொழியை ஒரு தொடர்பாடல் கருவியாக பயன்படுத்ததே இலங்கையில் ஆங்கிலம் கற்பிப்பது தோல்வியடைந்துள்ளது. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆங்கில கற்கை பிரிவுகள் வெள்ளையர்களை உருவாக்க முயற்சிக்கின்றன.
தம்மை வெள்ளையர்கள் என எண்ணும் நபர்களை உருவாக்க முயற்சிக்கின்றன. உண்மையான வெள்ளையர்கள் விட உடைந்த ஆங்கில வார்த்தைகளை நாமே பயன்படுத்துகிறோம்.

பசில் கப்புடாஸ் (காகங்கள்) என்று கூறினார் என அவமதிக்கும் ஜே.வி.பியுடன் தொடர்புடைய சமூக ஊடக செயற்பாட்டாள்கள் சிரிக்கின்றனர். இவர்களில் எவருக்கும் இரண்டு ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க தெரியாது. அவர்களுக்கு இந்த காணொளியில் இருக்கும் கப்புடாஸ் என்ற வார்த்தை மாத்திரமே தெரியும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!