ஏமனுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடத்தல்காரர்களால் கடலில் தள்ளிவிட்டப்பட 49 புகலிடக் கோரிக்கையாளர்கள் உயிரிழப்பு

ஏமனுக்கு அண்மித்த கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சுமார் 49 பேர், நீரில் மூழ்கிக் உயிரிழந்துள்ளதுடன் 71பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகொன்றில் 120 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ள வேளை குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நடமாட்டத்தினை அவதானித்த கடத்தல்காரர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களை கடலில் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தவேளை அந்த வழியாக வந்த பாதுகாப்பு படையினர் 71 பேரை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அனைவருமே 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: