சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை: – அனுஷா நாயர்

தமிழில், ’மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’, ’சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ மலையாளத்தில் ‘தாவளம்’, பகத்ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ உட்பட சில படங்களில் நடித்தவர் அனுஷா நாயர். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனம் செலுத்திய அனுஷா, இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கிறார்.

’பரதம், குச்சுப்புடி நடனத்தில் நான் எக்ஸ்பர்ட். மேடை கிடைத்தால் ஆடிவிடுவேன். அன்னயும் ரசூலும் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம். இதில் கெஸ்ட் ரோலில்தான் நடித்தேன். இதில் நடித்த போது பகத் பாசில் நிறைய அட்வைஸ் பண்ணினார். இப்போது மலையாள இயக்குநர் ராஜீவ் ரவி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். தமிழிலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை’ என்கிறார் அனுஷா நாயர்.

Tags: