மாதவிடாயின் போது அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஆபத்தா?

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வயிற்று வலி ஏற்படுவது இயல்பு. அதுவே சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக மாதவிடாயின் போது அடிக்கடி மலம் கழிக்க நேரிடும்.

ஏனெனில் மாதவிடாய் காலத்தில் கர்ப்பப்பையுடன் தொடர்புடைய புரோஸ்ட்டக்ளாண்டின் எனும் ஹார்மோன் செரிமான மண்டலத்தை வேகமாக இயக்கி, மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்போக்கை உண்டாகிறது.

அதுவும் சில நேரத்தில் மன அழுத்தம் கூட இந்த அதிவேக செரிமானத்திற்கு காரணமாக அமையலாம்.

தடுப்பது எப்படி?

மாதவிடாய் காலத்தில் காய்கறிகள், பழங்கள், அதிக பைபர் மற்றும் சிறிது கார்போஹைட்ரைட் நிறந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை?

மாதவிடாய் காலத்தில் சாக்லேட், பிரட், எண்ணெய் உணவுகள், வாய்வு உணவு பொருட்கள், காபி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Tags: ,