விரைவில் அறிமுகமாகின்றது சின்னஞ் சிறிய ஸ்மார்ட் கைப்பேசி!

தற்போது சாம்சுங், ஆப்பிள், கூகுள் போன்ற பல நிறுவனங்களால் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவை அளவில் சற்று பெரிதாகவே இருக்கின்றன.

இந்நிலையில் மிகவும் சிறிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியினை Ghost Technologies நிறுவனம் வடிவமைத்துள்ளது.

Nanite Micro என அழைக்கப்படும் இக் கைப்பேசி 1.8 அங்குல அளவே உயரம் உடையது.

முற்றுமுழுதாக அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியினை ஏனைய Android மற்றும் iOS சாதனங்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியும்.

இதில் SIM உட்பட microSD கார்ட் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தற்போது Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள குறித்த கைப்பேசியானது இவ் வருடம் நொவெம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: , , ,